🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌
ஆம்பூர் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச #ஓவிய #பயிற்சி...
🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌🖌
ஆம்பூர், பெத்லேகம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு 04.06.2019 அன்று ஓவியப் பயிற்சி இலவசமாக "ஆம்பூர் ஸ்ரீ கிருஷ்ணா ஓவியப்பயிற்சி" சார்பில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திரு.ஜோ சத்திய குமார் தலைமை தாங்கினார்.
"கிருஷ்ணா ஓவியப் பயிற்சி" பள்ளியின் நிறுவனர் திரு.இங்கர்சால் மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி அளித்தார். அப்போது அவர் பேசும்போது ஓவியம் என்பது பெரும் கலை. ஓவியத்தால் பல பயன்கள் உள்ளன. ஓவியக்கலை பிற பாடங்களுடன் நிறைய தொடர்புகள் உள்ளன. அவற்றை மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ள இது போன்ற பயிற்சி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இதையடுத்து #அளவுகோல் துணையின்றி #நேர்கோடு #வரைதல்,
#மேஜிக் #ஓவியம்,
#மணல் #ஓவியம் #வரைதல், #எழுத்து #ஓவியம் #எண் #ஓவியம், #விரல் #கணிதம் ,#வாய்ப்பாடு #இல்லாமல் #கணக்குப் #போடுதல் #இயற்கை #காட்சி வண்ண ஓவியம் வரைதல், #மணல் #ஓவியம் வரைதல், #ரேகை #ஓவியம் குறித்த பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன.
இதையடுத்து விரல் #கணித #விளையாட்டு மூலம் பெருக்கல் வாய்ப்பாடு எளிய முறையில் கணக்கிடுதல் குறித்து கற்பிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சி மூலம் சிறந்த ஓவிய படைப்புகளை உருவாக்கிய மாணவிகள் மனிஷா, பாவனா, திவ்யா, தனலட்சுமி,ஸ்ரீ வித்யா, டில்லி பாபு, சண்முகப்பிரியா, அர்ஷத், உள்ளிட்ட 15 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் அமர்நாத், சரவணன், ஜெயசீலன், சரண்யா, வினோதாபாய், சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.
0 Comments