ஆம்பூர் பெத்தலகேம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "ஸ்டிரேஞ்சர்" நன்கொடையாக வழங்கிய கன்கார்டியா பள்ளி தோழர்கள் அறக்கட்டளை!!

ஆம்பூர் பெத்தலகேம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "ஸ்டிரேஞ்சர்" நன்கொடையாக வழங்கிய கன்கார்டியா பள்ளி தோழர்கள்  அறக்கட்டளை!!

ஆம்பூர்  பெத்தலகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 350 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 இப்பள்ளியில் காலை இறை வணக்கம் கூட்டம் நடைபெறுவதற்கும் வகுப்பறையில் நவீன தொழில்நுட்பங்களை கொண்டு பாடம்  கற்பிப்பதற்கும் உதவும் வகையில் கன்கார்டியா பள்ளி தோழர்கள்  அறக்கட்டளை சார்பில் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள "ஸ்டிரேஞ்சர்" பள்ளிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோ சத்திய குமார் அறக்கட்டளை நிர்வாகிகள் சிம்சன், மனோ, பிரின்ஸ், சாம், சுரேஷ் மற்றும் ஆசிரியர்கள் சரவணன், ஜெயசீலன், வில்சன், ராஜலட்சுமி, சரண்யா, ஜெயபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






















Post a Comment

0 Comments