Children's movie "The Red Balloon" was shown to students at Bethlehem Municipal Middle School

Children's movie "The Red Balloon" was shown to students at Bethlehem Municipal Middle School..

 Block Educational Officer-2 participated and created awareness among the students about the event.


ஆம்பூர் பெத்லகேம் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆஸ்கார் விருது பெற்ற 'தி ரெட் பலூன்'  சிறார் திரைப்படம் திரையிடல்!! 

 வாழ்வியல் நற்பண்புகளை மேம்ப டுத்த அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக இன்று ஆஸ்கார் விருது பெற்ற 'தி ரெட் பலூன்' படம் காட்டப்பட்டது. 

தி ரெட் பலூன்' குறும்படம் :-

திரைப்படங்கள் வாயிலாக உலகத்தை புதிய பார்வையில் மாணவர்களை பார்க்க வைப்பதும், அவர்களின் வாழ்வியல் நற்பண்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக வைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறார் திரைப்படம் திரையிடல் விழா நடத்த கல்வித்துறை திட்டமிட்டது.அதன்படி, ஒவ்வொரு மாதமும் 2-வது வாரத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இதற்கென்று பள்ளிகளில் பாடவேளைகள் 2 மணி நேரம் ஒதுக்கப்படுகிறது. புரொஜெக்டர் மூலம் படங்கள் திரையிடுவதற்கு ஏற்றவாறு வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 திரையிடப்படுவதற்கு முன்பு சிறப்பு அழைப்பா ளர்கள் யாரையாவது அழைத்து பேச வைக்க வேண்டும். அந்த வகையில் இந்த
இந்த மாதம் பிரெஞ்சு மொழியில் ஆஸ்கார் விருது பெற்ற 'தி ரெட் பலூன்' குறும்படம் நேற்று முதல் பள்ளிகளில் திரையிடப்பட்டது. சுமார் 34 நிமிடம் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தை மாணவ-மாணவிகளுக்கு போட்டு காட்டப்பட்டது.

 ‘ஸ்பார்ட்லைட்' கேள்விகள்:- 

திரைப்படம் திரையிடுவதோடு மட்டுமல்லாது, படத்தின் கதைக்களம், மைய கதா பாத்திரங்கள், துணை நடிகர்கள், ஒளிப்பதிவுகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து 'ஸ்பார்ட்லைட்' கேள்விகளும் மாணவ-மாணவிகள் மத்தியில் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் பதில் அளிக்கும் வகையிலும் நேரம் தரப்பட்டது. மேலும், படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை உருவாக்கி, அதில் நடிக்கும் நடிகர்களை போன்று நடிக்க சொல்வது போன்ற நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட் டன. 

இதன்படி, ஆம்பூர் பெத்தலகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இந்த 'தி ரெட் பலூன்' படம் திரையிடப் பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வட்டரக் கல்வி அலுவலர் திரு.உதயசங்கர் கலந்து கொண்டார்.

பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.ஜோ சத்திய குமார் ஆசிரியர்கள் திரு. சரவணன், ஜெயசீலன், வில்சன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கு பெற்றனர்.






Post a Comment

0 Comments