வளரும் கலாம் விருது பெற்ற
ஆம்பூர் பெத்லகேம் பள்ளி
மாணவிக்கும் கலாம் விருது பெற்ற ஆசிரியர் திரு. ஜெயசீலன் அவர்களுக்கும் வேலூர் மாவட்ட CEO அவர்கள் பாராட்டு!!
"நாளைய கலாம் விருது" பெற்ற பெத்லகேம் அரசு பள்ளி மாணவி செல்வி.ஷண்முகப்ரியாவை வேலூர் மாவட்ட
CEO.மார்ஸ் அவர்கள் பாராட்டினர். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் சிறந்த அறிவியல் கண்டுபிடிப்பு கருவிகளை உருவாக்கிடும் பொருட்டு,வளரும் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கும் வகையில்,
மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு #கலாம் #விருதுகள் வழங்க "காஞ்சி தமிழ்ச்சங்கத்தினர்"
மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தின் சார்பில் "வளரும் கலாம் விருது" பெற்ற ஆம்பூர் "பெத்லகேம்" அரசு பள்ளி மாணவி செல்வி.ஷண்முகப்ரியா
சிறந்த படைப்புகளை படைத்து தேர்வு செய்யப்பட்டார்.இதற்கான விழா கடந்த 27 ஆம் தேதி ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் #அப்துல்கலாம் நினைவு மண்டபத்தில் "நாளைய கலாம்"விருது வழங்கப்பட்டது. மேலும் மாணவிக்கு வழிகாட்டியாக இருந்த அப்பள்ளி அறிவியல் ஆசிரியர் திரு.க.#ஜெயசீலன் மற்றும் ஆங்கில ஆசிரியர் திரு.#ச.சரவணன் ஆகியோரை வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.மார்ஸ் அவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.💐💐💐💐💐💐
0 Comments