தமிழகம் முழுவதும் கரோனா தொற்றால் மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத சூழல் உள்ளதால், கல்வித் தொலைக்காட்சி வாயிலாககற்பிக்கப்படுகிறது.மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி பார்த்து பாட கருத்துகளை உள்வாங்குதல், எளிய பயிற்சிகள் அடங்கிய ஒப்படைப்புகள் வழங்கி அதனை மதிப்பீடு செய்தல்.போன்ற ஆய்வுக்காக திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் சரவணன் மற்றும் ஜெயசீலன் ஆகியோர் பள்ளி மாணவர்களின் வீடு,வீடாக நேரில் சென்று மாணவர்களை பாட ஒப்படைப்பு செய்யவலியுறுத்தினார்கள்.பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.இப்பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கூலி வேலை பார்ப்பதால் மாணவர்களிடம் இணைய வசதி மற்றும் ஆண்ட்ராய்டு போன் இல்லாததால் கல்வி தொலைக்காட்சியை மட்டுமே பார்த்து படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் இப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
0 Comments